சென்னையில்...
நானும் சென்னை வாசிதான். சென்னையில் நான்கு வருடமாக வசித்து வருகிறேன். நான் இங்கு பார்த்தவற்றை ஒரு சிறிய பதிவாக பதிவு செய்ய விரும்புகிறேன் (இது என் சிந்தனை).
குடிநீர் :
இங்கு எல்லாமே வணிகம்தான். குடிக்கிற தண்ணீர்கூட காசுதான். ஒரு கேன் தண்ணீ 40 ரூபாய், கார்பொரேஷன் தண்ணீ வருது ஆனா குடிக்க முடியாது.
"குடிமக்களின் அடிப்படை வசதின்னு சொல்லற கல்வி, மருத்துவம், குடிநீர்"
இதுல கல்வி, மருத்துவம் ரெண்டும் வியாபாரத்தின் உச்சியில் இருக்கு. குடிநீரும் அத நோக்கி போய்கிட்டு இருக்கு. எல்லா தெருக்களுக்கும் தண்ணீ லாரினு ஒன்னு வரும் "சென்னை குடிநீர்" வாரிய ஒப்பந்த ஊறுதி.
இதுலயும் காசுதான் சின்ன குடம் - 6 ரூபாய், பெரிய குடம் - 8 ரூபாய், இதை வாங்கி உபயோகபடுத்துபவர்கள் அனைவரும் சாதாரண மக்கள் (Poor & Middle class), பெரிய பணக்காரர்கள் இல்லை. பணம் கொண்டவர்கள் மற்றும் மேல் நடுத்தர மக்கள் (Upper Middle class) தங்களுக்கு தேவையான தண்ணீரை (மினரல் வாட்டர்) பணம் கொடுத்து வாங்கிக்கொள்கின்றனர். ஆனால் இதுல கொடும என்னன்ன குடிநீருக்கும் சேர்த்து நாம வரி காட்டுறோம். ஒப்பந்தார்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் அரசு பணம் செலுத்து(தலா)ம்.
வரிப்பணம் :
மக்களுக்கு அரசு தரவேண்டிய தரமான குடிநீர் தரவில்லை, காரணம் நாம் சரியான அரசை (ஒரு விரல்) தேர்ந்தெடுக்கவில்லை, அத்தியாவசியத்திற்கும் ஆடம்பரத்திற்கும் வித்தியாமா தெரியாமல் நாகரிக வளர்ச்சி என்ற மாயையில் மறைந்து விட்டோமோ என்ற எண்ணம் என்னுள் எழுகிறது. நாம் கட்டுகிற வரிப்பணம் சில திட்டங்கள் என்ற பெயரில் மறைந்துவிடுகின்றன. சில திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன, பல திட்டங்கள் அறிக்கையாகவே உள்ளன. அவை எல்லாம் ஊழலால் சுருட்டப்படுகின்றன.
முட்டாளர்கள் :
இவை அனைத்தும் நமக்கு தெரிந்துதான் நடக்கிறது, ஒரு சில பரபரப்பான செய்திகளால் நம்மை முட்டாளர்களாக நடத்துகின்றனர், நாமும் சகித்து கொண்டு வாழ்க்கையில் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.
கால - மாற்றம் :
"காலம் தன்னை தானே மாற்றிக்கொள்ளும்."
நான் இங்கு யாரையும் குறைகூறவில்லை
நன்றி !
Common Man!


Comments
Post a Comment