சென்னையில்... நானும் சென்னை வாசிதான். சென்னையில் நான்கு வருடமாக வசித்து வருகிறேன். நான் இங்கு பார்த்தவற்றை ஒரு சிறிய பதிவாக பதிவு செய்ய விரும்புகிறேன் (இது என் சிந்தனை). குடிநீர் : இங்கு எல்லாமே வணிகம்தான். குடிக்கிற தண்ணீர்கூட காசுதான். ஒரு கேன் தண்ணீ 40 ரூபாய், கார்பொரேஷன் தண்ணீ வருது ஆனா குடிக்க முடியாது. "குடிமக்களின் அடிப்படை வசதின்னு சொல்லற கல்வி, மருத்துவம், குடிநீர்" இதுல கல்வி, மருத்துவம் ரெண்டும் வியாபாரத்தின் உச்சியில் இருக்கு. குடிநீரும் அத நோக்கி போய்கிட்டு இருக்கு. எல்லா தெருக்களுக்கும் தண்ணீ லாரினு ஒன்னு வரும் "சென்னை குடிநீர்" வாரிய ஒப்பந்த ஊறுதி. இதுலயும் காசுதான் சின்ன குடம் - 6 ரூபாய், பெரிய குடம் - 8 ரூபாய், இதை வாங்கி உபயோகபடுத்துபவர்கள் அனைவரும் சாதாரண மக்கள் (Poor & Middle class), பெரிய பணக்காரர்கள் இல்லை. பணம் கொண்டவர்கள் மற்றும் மேல் நடுத்தர மக்கள் (Upper Middle class) தங்களுக்கு தேவையான தண்ணீரை (மினரல் வாட்டர்) பணம் கொடுத்து வாங்கிக்கொள்கின்றனர். ஆனால் இதுல கொடும என்னன்ன குடிநீருக்கும் சேர்த்து நாம வரி காட்...